Popular Posts

Thursday, 16 December 2021

மார்கழியில் ஆலயவழிபாடு

 மார்கழி மாத காலை நேர ஆலயவழிபாடு என்பது உடலுக்கும் உள்ளத்திற்கும் புத்துணர்ச்சி வழங்குகின்ற நிகழ்வாகவே நான் கருதுகின்றேன்.இதனைக் கருத்தில் கொண்டே கடந்த மூன்றாண்டுகளாக எங்களது ccwwc நண்பர்கள் ஒன்றினைந்து இதனை நடைமுறைபடுத்தி வருகின்றோம் .முதலில் குடந்தை நகரில் உள்ள சிவாலயங்கள் மற்றும. வைணவ ஆலயங்களில் ஒவ்வொரு நாள் ஓர்ஆலயம் என வழிபாட்டினை மேற்கொண்டு வருகிறோம் .பின்னர் குடந்தையைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் வழிபாட்டினை மேற்கொண்டு நிறைவு செய்து வருகிறோம்.சில நிகழ்வுகள் பகிரப்பட்டுள்ளது.


Tuesday, 6 October 2020

8 ஆம் ஆண்டு வீரனார் கூட்டு வழிபாடு









 இந்த ஆண்டு 2020 ல் கொரனா வைரஸால் நாடு முழுவதும் ஏற்பட்ட தொற்று பாதிப்பினை கட்டுப்படுத்தும் விதமாக மார்ச் 25 முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு நடைமுறையில் இருந்தபடியால் வைகாசி மாதம் ( மே) கூட்டு வழிபாடு நடத்த இயலவில்லை.ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் புரட்டாசி 11 அன்று (27.9.20) ஞாயிறு அன்று வழக்கம்போல் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.இதற்கான அறிவிப்பினை வாட்ஸ்ப் மூலம் தெரிவிக்கப்பட்டது.காலை 10.15 மணி அளவில் அ/மி கற்பகவிநாயகருக்கு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டன. பின்னர் அ/மி வீரனாருக்கு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டு 12.00 மணி அளவில் தீபாராதனை நடத்தப்பட்டது.வீரனார் சந்நிதியின் முன்னால் உள்ள திறந்தவெளியில் மகளிர் பொங்கல் பொங்கி படையலிட்டனர்.மாவிளக்கும் ஏற்றி வழிபட்டனர். இந்த ஆண்டு்   திரு.நடராஜன் குடும்பத்தினர், ரவிச்சந்திரன் குடும்பத்தினர், ஜெயக்குமார் குடும்பத்தினர், ராமலிங்கம் குடும்பத்தினர், முருகன் குடும்பத்தினர்,அருணாசலம் பிள்ளை,சண்முகநாதன் குடும்பத்தினர், செந்தில்நாதன் குடும்பத்தினர் மற்றும் பாலசுப்ரமணியன் குடும்பத்தினர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.இவர்களுடன் திரு.நடராஜன் சகோதரிகளும் குடும்பத்துடன் கலந்துகொண்டனர்.அபிஷேகத்திற்கான செலவினை திரு.முருகன் குடும்பத்தினரும்,பழங்கள்,மலர்மாலைகள்,பூக்கள்,வெற்றிலை பாக்கு செலவினை பாலசுப்ரமணியன் குடும்பத்தினரும்,காலை மற்றும் மதிய உணவிற்கான செலவினை நடராஜன் குடும்பத்தினரும் பகிர்ந்து கொண்டனர்.ஏனையவற்றை கூட்டு வழிபாட்டு மன்றம் ஏற்றுக்கொண்டது.கலந்து கொண்டு சிறப்பித்த அனைவருக்கும் நன்றிகள் பல.









Friday, 8 November 2019

படையல் சம்பந்தமான குறிப்புகள்

எதிர்காலத்தில் இவ்வித நிகழ்ச்சிகள் நடத்திட விரும்புவோருக்கு உதவியாக சில குறிப்புகள் இங்கு பதியப்படுகின்றன.  முதலில் இது ஒரு கூட்டு முயற்சி யினால் மட்டுமே முழு வெற்றி கிடைக்கும். எனவே இதில் எல்லோருடைய பங்களிப்புமே மிக முக்கியமானதாகும்.
முக்கிய பலகாரங்கள்: அதிரசம்,காப்பரிசி,எள்ளுருண்டை,கொழுக்கட்டை,வடை ,சுழியன் ,மாவிளக்குஆகியவை.விருப்பத்திற்கு ஏற்ப அதிகப்படுத்திக் கொள்ளலாம்.
கறி வகைகள்: தயிர் பச்சடி,வாழைக்காய்பொறியல்,மாங்காய் பச்சடி,கருணைக்கிழங்கு மசியல்,கீரைக்கூட்டு, விருப்பம் போல் உயர்த்திக் கொள்ளலாம்.

சர்கரைப் பொங்கல் மற்றும் நண்டல் சாதம் ஆகியவையும் இலையில் பரிமாறப்படவேண்டும்.தைப்பொங்கலுக்கு வைப்பது போல் சிறிய வெல்லத்துண்டு,நெய்,தேங்காய் துண்டு,வாழைப்பழத்துண்டு,தயிர் ஆகியவையும் பரிமாறப்படவேண்டும்.
    சிறிய இலைத் துண்டுகளில் அரைத்த மருதாணி விழுதும் வைக்கப்பட வேண்டும்.
  ஒவ்வொரு புடவையிலும் ஓர் எலுமிசம் பழம் சார்த்தப்பட வேண்டும் .வளையல்கள்,ரவிக்கை துண்டுகள்,மஞ்சள்,குங்குமம்,வெற்றிலை, பாக்கு, தேங்காய்,பழ வகைகள் ,பூ,ஆகியவையும் தேவைக்கேற்ப வைக்கப்பட்டு வழிபாடு்நடத்திட வேண்டும்.
  ஆயத்தபணிகள்: வழிபாட்டினை சிறப்பாகமேற்கொள்ள மிகச்சரியான முறையில் திட்டமிட்டு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.அழைப்பு விடுக்க வேண்டியவர்களுக்கு முன்னதாகவே தெரிவிக்க வேண்டும். கடைகளில் இருந்து வாங்க வேண்டிய பொருள்களை காலத்தே வாங்கி வைத்தல் வேண்டும்.புடவை மற்றும் ரவிக்கை துண்டுகள் வாங்கும் பொழுது கருப்பு மற்றும் கருநீல வண்ணங்களை தவிர்த்தல் அவசியம்.வீட்டில் வழிபாடு நடத்தும் பகுதியினை முதல் நாளே சிறப்பாக சுத்தம் செய்தல் வேண்டும். வழிபாட்டில் வைக்கப்பட வேண்டிய புடவைகளுக்கு ஏற்ப மனைப்பலகைகள் தயார் செய்து அவற்றை நீரினால் சுத்தம் செய்து அதற்கே உள்ள பிரத்யேகமான கோலங்கள் போடவேண்டும். அது போல் தரையிலும் அதற்கே உரிய கோலங்கள் போடப்படவேண்டும்.புள்ளி கோலங்கள் தவிர்க்கப்படவேண்டும்.சுவரில் மஞ்சள் மற்றும் குங்குமப்பொட்டு ஒற்றைப்படை எண்ணிக்கையில் (5,7,9,11,13,15........) (பொங்கல் கொண்டாட்டத்திலும் இவ்வழக்கம் உண்டு) வைத்து அவற்றில் சிவந்தி 💐 பூக்களின் இதழ்களை பதிக்கவும்.பானையில் வைக்கப்படும் புடவை ஊசிவண்ண பட்டுப் புடவைஎன்ற வகையைச் சார்ந்ததாகும். சில கடைகளில் மட்டுமே கிடைக்கும். சிரமப்பட்டுதான் வாங்கவேண்டும். கிடைக்காத பட்சத்தில் மாற்று ஏற்பாடு செய்து கொள்ளலாம்.ஏனைய புடவை மற்றும் துணிகளை விருப்பத்திற்கு ஏற்ப வாங்கிக் கொள்ளலாம்.ஆனால் இவற்றிலும் கருப்பு மற்றும் கருநீல வண்ணங்கள் தவிர்க்கப் படவேண்டும். வழிபாடு முடிந்த பின் இவற்றை வீட்டில் வயதில் மூத்த பெண்மணி அனைவருக்கும் உரிய பொருள்களுடன் தட்டில் வைத்து ஆசிர்வதித்து வழங்கவேண்டும்.

 




வீட்டு தெய்வத்துப் படையல்

அதிகாலை 5.45 மணி அளவில் பூஜை அலமாரியின் மேல் பகுதியில் வைக்கப்பட்டிருந்த தெய்வத்து பானை கீழே இறக்கப்பட்டது. அதன் உள்ளிருந்த புடவைகள் வெளியில் எடுக்கப்பட்டன. மொத்தம் 8 புடவைகள் இருந்தன. அதற்கு முன்னதாக பானையின் மடக்கில் குடும்ப உறுப்பினர்கள் பலராலும் பலசமயங்களில் வேண்டிக்கொண்டு செலுத்திய காணிக்கையினை சேகரித்து எண்ணப்பட்டது. ₹4070/= இருந்தது. அதனை பூஜை செலவில் பயன்படுத்திக்கொள்ளலாம் என்ற முடிவின்படி முதல்நாள் இரண்டு புதிய பானைகள்,மடக்கு,மேல் சட்டி மற்றும் கலவடை ஆகியவை ₹1200/= க்கு வாங்கப்பட்டன. ஏனைய தொகையை எஞ்சிய செலவிற்கு பயன்படுத்தப்பட்டது.பழைய பானையில்இருந்து எடுக்கப்பட்ட 8 புடவைகள் மற்றும்பானையில் வைப்பதற்காக வாங்கப்பட்ட புதிய புடவைகள் 3, முதல் தலைமுறை மருமகள்கள் நால்வர் மற்றும் இரண்டாம் தலைமுறை மருமகள்கள் அறுவர் ஆகியோர் சேர்த்து 21 புடவைகள் நீரில் நனைக்கப்பட்டு பின்னர் உலர்த்தப்பட்டன. அதுபோல் முதல் தலைமுறை வீட்டு மகள்கள்,இரண்டாம் மற்றும்மூன்றாம் தலைமுறையைச்சார்ந்த மகள்களுக்கும் புதுப்புடவைகள் எடுக்கப்பட்டு நீரில்நனைக்காமல் வழிபாட்டில் மட்டும்வைக்கப்பட்டு பின்னர் அவர்களிடம்வழங்கப்பட்டன.உலர்ந்த புடவைகள் அனைத்தும்தனித்தனியாக  எடுக்கப்பட்டு பிரத்யேகமான முறையில்முறுக்கப்பட்டு புகைப்படத்தில் உள்ளது போல் வரிசையாக வைக்கப்பட்டு பின்னர் அலங்கரிக்கப்பட்டன. அவரவர் புடவைகளின் மீது திருமாங்கல்ய சங்கிலியை அணிவித்தனர்.  21 வாழை இலையில் காலை முதல் தயாரிக்கப்பட்ட பலகாரங்கள் பரிமாறப்பட்டன. வீட்டில் இருந்த அனைத்து விளக்குகளும் ஏற்றப்பட்டிருந்த காட்சி கண்ணிற்கு விருந்தாய் அமைந்திருந்தது. ஆரத்தி காண்பிக்கப்பட்டு பூஜை இனிதே நிறைவுற்றது. பின்னர் எல்லோரும்மதிய விருந்தினை உண்டு மகிழ்ந்தனர்.

பின்னர் மூன்று பானைகளிலும் படைக்கப்பட்ட புடவைகளில் 11 மட்டும் வைக்கப்பட்டன. ஏனையவற்றை அவரவர் உடுத்திக்கொண்டு இறை வழிபாட்டிற்கு மாலை ஆலயம் சென்று வந்தனர். மாலை 6.15 மணி அளவில் சென்னைக்கும்அடுத்த நாள்(4.11.19) காலை 6.15 மணிக்கு குடந்தைக்கும் முறையே புதிய தெய்வத்து பானைகள் எடுத்துச் செல்லப்பட்டு அவர்தம் இல்லங்களில் வைக்கப்பட்டு நித்ய வழிபாடு தொடர்கிறது.