ம
இந்த ஆண்டு 2020 ல் கொரனா வைரஸால் நாடு முழுவதும் ஏற்பட்ட தொற்று பாதிப்பினை கட்டுப்படுத்தும் விதமாக மார்ச் 25 முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு நடைமுறையில் இருந்தபடியால் வைகாசி மாதம் ( மே) கூட்டு வழிபாடு நடத்த இயலவில்லை.ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் புரட்டாசி 11 அன்று (27.9.20) ஞாயிறு அன்று வழக்கம்போல் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.இதற்கான அறிவிப்பினை வாட்ஸ்ப் மூலம் தெரிவிக்கப்பட்டது.காலை 10.15 மணி அளவில் அ/மி கற்பகவிநாயகருக்கு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டன. பின்னர் அ/மி வீரனாருக்கு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டு 12.00 மணி அளவில் தீபாராதனை நடத்தப்பட்டது.வீரனார் சந்நிதியின் முன்னால் உள்ள திறந்தவெளியில் மகளிர் பொங்கல் பொங்கி படையலிட்டனர்.மாவிளக்கும் ஏற்றி வழிபட்டனர். இந்த ஆண்டு் திரு.நடராஜன் குடும்பத்தினர், ரவிச்சந்திரன் குடும்பத்தினர், ஜெயக்குமார் குடும்பத்தினர், ராமலிங்கம் குடும்பத்தினர், முருகன் குடும்பத்தினர்,அருணாசலம் பிள்ளை,சண்முகநாதன் குடும்பத்தினர், செந்தில்நாதன் குடும்பத்தினர் மற்றும் பாலசுப்ரமணியன் குடும்பத்தினர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.இவர்களுடன் திரு.நடராஜன் சகோதரிகளும் குடும்பத்துடன் கலந்துகொண்டனர்.அபிஷேகத்திற்கான செலவினை திரு.முருகன் குடும்பத்தினரும்,பழங்கள்,மலர்மாலைகள்,பூக்கள்,வெற்றிலை பாக்கு செலவினை பாலசுப்ரமணியன் குடும்பத்தினரும்,காலை மற்றும் மதிய உணவிற்கான செலவினை நடராஜன் குடும்பத்தினரும் பகிர்ந்து கொண்டனர்.ஏனையவற்றை கூட்டு வழிபாட்டு மன்றம் ஏற்றுக்கொண்டது.கலந்து கொண்டு சிறப்பித்த அனைவருக்கும் நன்றிகள் பல.
No comments:
Post a Comment