அதிகாலை 5.45 மணி அளவில் பூஜை அலமாரியின் மேல் பகுதியில் வைக்கப்பட்டிருந்த தெய்வத்து பானை கீழே இறக்கப்பட்டது. அதன் உள்ளிருந்த புடவைகள் வெளியில் எடுக்கப்பட்டன. மொத்தம் 8 புடவைகள் இருந்தன. அதற்கு முன்னதாக பானையின் மடக்கில் குடும்ப உறுப்பினர்கள் பலராலும் பலசமயங்களில் வேண்டிக்கொண்டு செலுத்திய காணிக்கையினை சேகரித்து எண்ணப்பட்டது. ₹4070/= இருந்தது. அதனை பூஜை செலவில் பயன்படுத்திக்கொள்ளலாம் என்ற முடிவின்படி முதல்நாள் இரண்டு புதிய பானைகள்,மடக்கு,மேல் சட்டி மற்றும் கலவடை ஆகியவை ₹1200/= க்கு வாங்கப்பட்டன. ஏனைய தொகையை எஞ்சிய செலவிற்கு பயன்படுத்தப்பட்டது.பழைய பானையில்இருந்து எடுக்கப்பட்ட 8 புடவைகள் மற்றும்பானையில் வைப்பதற்காக வாங்கப்பட்ட புதிய புடவைகள் 3, முதல் தலைமுறை மருமகள்கள் நால்வர் மற்றும் இரண்டாம் தலைமுறை மருமகள்கள் அறுவர் ஆகியோர் சேர்த்து 21 புடவைகள் நீரில் நனைக்கப்பட்டு பின்னர் உலர்த்தப்பட்டன. அதுபோல் முதல் தலைமுறை வீட்டு மகள்கள்,இரண்டாம் மற்றும்மூன்றாம் தலைமுறையைச்சார்ந்த மகள்களுக்கும் புதுப்புடவைகள் எடுக்கப்பட்டு நீரில்நனைக்காமல் வழிபாட்டில் மட்டும்வைக்கப்பட்டு பின்னர் அவர்களிடம்வழங்கப்பட்டன.உலர்ந்த புடவைகள் அனைத்தும்தனித்தனியாக எடுக்கப்பட்டு பிரத்யேகமான முறையில்முறுக்கப்பட்டு புகைப்படத்தில் உள்ளது போல் வரிசையாக வைக்கப்பட்டு பின்னர் அலங்கரிக்கப்பட்டன. அவரவர் புடவைகளின் மீது திருமாங்கல்ய சங்கிலியை அணிவித்தனர். 21 வாழை இலையில் காலை முதல் தயாரிக்கப்பட்ட பலகாரங்கள் பரிமாறப்பட்டன. வீட்டில் இருந்த அனைத்து விளக்குகளும் ஏற்றப்பட்டிருந்த காட்சி கண்ணிற்கு விருந்தாய் அமைந்திருந்தது. ஆரத்தி காண்பிக்கப்பட்டு பூஜை இனிதே நிறைவுற்றது. பின்னர் எல்லோரும்மதிய விருந்தினை உண்டு மகிழ்ந்தனர்.
பின்னர் மூன்று பானைகளிலும் படைக்கப்பட்ட புடவைகளில் 11 மட்டும் வைக்கப்பட்டன. ஏனையவற்றை அவரவர் உடுத்திக்கொண்டு இறை வழிபாட்டிற்கு மாலை ஆலயம் சென்று வந்தனர். மாலை 6.15 மணி அளவில் சென்னைக்கும்அடுத்த நாள்(4.11.19) காலை 6.15 மணிக்கு குடந்தைக்கும் முறையே புதிய தெய்வத்து பானைகள் எடுத்துச் செல்லப்பட்டு அவர்தம் இல்லங்களில் வைக்கப்பட்டு நித்ய வழிபாடு தொடர்கிறது.

No comments:
Post a Comment