குராவடி குமர பக்தரகளுக்கும் பாத யாத்திரை மேற்கொண்ட அன்பர்களுக்கும் வணக்கம் .வழக்கம்போல் இந்த ஆண்டும் மேற்படி பாத யாத்திரை 21.09.2012 அன்று மேற்கொளப்பட்டது .இது 31 வது ஆண்டு நடைப்பயணம் ஆகும் . வழக்கம் போல் இவ்வாண்டும் சீர்காழி நகரத்தில் கடைக்கண் விநாயகர் எஸ்டேட் திருமணமண்டபத்தில் பக்தர்களுக்கு மாலை 07.00 மணி முதல் இரவு சுமார் 01.00 மணி வரை அன்னதானம் அளிக்கப்பட்டது . மேற்படி பணியினை திருக்குருகாவூர் அ .சம்பந்தம்பிள்ளை குமாரர் ச .கற்பகவிநாயகம் மற்றும் அவர்தம் சகோதரர்கள் ,மேனாங்குடி பரமசிவம்பிள்ளை குமாரர் ப .கேதாரம் அவர்தம் சகோதரர் மற்றும் இரு குடும்பத்து உறவினர்களும் நண்பர்களும் சேர்ந்து மேற்கொண்டனர் .இடைக்கழி முருகனின் ஆணையினை சிரமேற்கொண்டு செவ்வனே நடத்திட்ட அனைத்து நல உள்ளங்களுக்கும் நன்றிகள் பல .
இவண் தி .ச .பாலு .
No comments:
Post a Comment