Popular Posts

Friday, 8 November 2019

படையல் சம்பந்தமான குறிப்புகள்

எதிர்காலத்தில் இவ்வித நிகழ்ச்சிகள் நடத்திட விரும்புவோருக்கு உதவியாக சில குறிப்புகள் இங்கு பதியப்படுகின்றன.  முதலில் இது ஒரு கூட்டு முயற்சி யினால் மட்டுமே முழு வெற்றி கிடைக்கும். எனவே இதில் எல்லோருடைய பங்களிப்புமே மிக முக்கியமானதாகும்.
முக்கிய பலகாரங்கள்: அதிரசம்,காப்பரிசி,எள்ளுருண்டை,கொழுக்கட்டை,வடை ,சுழியன் ,மாவிளக்குஆகியவை.விருப்பத்திற்கு ஏற்ப அதிகப்படுத்திக் கொள்ளலாம்.
கறி வகைகள்: தயிர் பச்சடி,வாழைக்காய்பொறியல்,மாங்காய் பச்சடி,கருணைக்கிழங்கு மசியல்,கீரைக்கூட்டு, விருப்பம் போல் உயர்த்திக் கொள்ளலாம்.

சர்கரைப் பொங்கல் மற்றும் நண்டல் சாதம் ஆகியவையும் இலையில் பரிமாறப்படவேண்டும்.தைப்பொங்கலுக்கு வைப்பது போல் சிறிய வெல்லத்துண்டு,நெய்,தேங்காய் துண்டு,வாழைப்பழத்துண்டு,தயிர் ஆகியவையும் பரிமாறப்படவேண்டும்.
    சிறிய இலைத் துண்டுகளில் அரைத்த மருதாணி விழுதும் வைக்கப்பட வேண்டும்.
  ஒவ்வொரு புடவையிலும் ஓர் எலுமிசம் பழம் சார்த்தப்பட வேண்டும் .வளையல்கள்,ரவிக்கை துண்டுகள்,மஞ்சள்,குங்குமம்,வெற்றிலை, பாக்கு, தேங்காய்,பழ வகைகள் ,பூ,ஆகியவையும் தேவைக்கேற்ப வைக்கப்பட்டு வழிபாடு்நடத்திட வேண்டும்.
  ஆயத்தபணிகள்: வழிபாட்டினை சிறப்பாகமேற்கொள்ள மிகச்சரியான முறையில் திட்டமிட்டு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.அழைப்பு விடுக்க வேண்டியவர்களுக்கு முன்னதாகவே தெரிவிக்க வேண்டும். கடைகளில் இருந்து வாங்க வேண்டிய பொருள்களை காலத்தே வாங்கி வைத்தல் வேண்டும்.புடவை மற்றும் ரவிக்கை துண்டுகள் வாங்கும் பொழுது கருப்பு மற்றும் கருநீல வண்ணங்களை தவிர்த்தல் அவசியம்.வீட்டில் வழிபாடு நடத்தும் பகுதியினை முதல் நாளே சிறப்பாக சுத்தம் செய்தல் வேண்டும். வழிபாட்டில் வைக்கப்பட வேண்டிய புடவைகளுக்கு ஏற்ப மனைப்பலகைகள் தயார் செய்து அவற்றை நீரினால் சுத்தம் செய்து அதற்கே உள்ள பிரத்யேகமான கோலங்கள் போடவேண்டும். அது போல் தரையிலும் அதற்கே உரிய கோலங்கள் போடப்படவேண்டும்.புள்ளி கோலங்கள் தவிர்க்கப்படவேண்டும்.சுவரில் மஞ்சள் மற்றும் குங்குமப்பொட்டு ஒற்றைப்படை எண்ணிக்கையில் (5,7,9,11,13,15........) (பொங்கல் கொண்டாட்டத்திலும் இவ்வழக்கம் உண்டு) வைத்து அவற்றில் சிவந்தி 💐 பூக்களின் இதழ்களை பதிக்கவும்.பானையில் வைக்கப்படும் புடவை ஊசிவண்ண பட்டுப் புடவைஎன்ற வகையைச் சார்ந்ததாகும். சில கடைகளில் மட்டுமே கிடைக்கும். சிரமப்பட்டுதான் வாங்கவேண்டும். கிடைக்காத பட்சத்தில் மாற்று ஏற்பாடு செய்து கொள்ளலாம்.ஏனைய புடவை மற்றும் துணிகளை விருப்பத்திற்கு ஏற்ப வாங்கிக் கொள்ளலாம்.ஆனால் இவற்றிலும் கருப்பு மற்றும் கருநீல வண்ணங்கள் தவிர்க்கப் படவேண்டும். வழிபாடு முடிந்த பின் இவற்றை வீட்டில் வயதில் மூத்த பெண்மணி அனைவருக்கும் உரிய பொருள்களுடன் தட்டில் வைத்து ஆசிர்வதித்து வழங்கவேண்டும்.

 




No comments:

Post a Comment